10 மில்லியன் வியூஸ்ஸைக் கடந்த 'ரெட்ரோ' படத்தின் டிரைலர்....!
trailer film Retro has crossed 10 million views
தனது 44- வது திரைப்படமான 'ரெட்ரோ' திரைப்படத்தில் நடிகர் 'சூர்யா' நடித்துள்ளார். இந்தப் படத்தை பிரபல இயக்குநர் 'கார்த்திக் சுப்பராஜ்' இயக்கியுள்ளார்.

மேலும், இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.இப்படத்தை சூர்யாவின் '2டி' மற்றும் கார்த்திக் சுப்பராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்' நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
அதுமட்டுமின்றி, இந்தப் படத்திற்கு 'சந்தோஷ் நாராயணன்' இசையமைத்துள்ளார். இந்த 'ரெட்ரோ' படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது.
மேலும்,படத்தின் டிரெய்லர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன் கூடுதலாக, டிரெய்லர் இதுவரை 10 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது.
இதனால் இந்தத் திரைப்படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.மேலும் இப்படத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
English Summary
trailer film Retro has crossed 10 million views