பெலிஜியம் கார் ரேஸில் வெற்றிபெற்ற அஜித்குமார் அணி- எத்தனையாவது இடம் தெரியுமா?
ajithkumar car racing team on beljiyam car race
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த பத்தாம் தேதி வெளியான திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இந்தப் படம் நல்ல விறுவிறுப்பாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் கடந்த சில மாதங்களாக கார் ரேஸில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
இதற்காக ‘அஜித் குமார் ரேஸிங்' என்ற அணியையும் அவர் நடத்தி வருகிறார். அதன் படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாயில் நடந்த கார் ரேஸில் அஜித்குமார் அணி, 3-வது இடம் பிடித்தது. இதையடுத்து இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் ரேஸிலும் 3-வது இடம் பிடித்தது.
இந்த நிலையில், பெல்ஜியம் நாட்டில் ஸ்பா பிரான்கோர்சாம்ப்ஸ் சர்க்கியூட்டில் நடைபெற்ற ஜிடி-4 யூரோபியன் சீரிஸ் ரேஸில் அஜித்குமார் கலந்து கொண்டார். இதில் அவர் அணி, 2-வது இடம் பிடித்துள்ளது. இதுகுறித்து, அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"இந்திய மோட்டார் விளையாட்டுத் துறைக்கு இது பெருமையான தருணம்" என்று தெரிவித்துள்ளார். அஜித்குமார் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
English Summary
ajithkumar car racing team on beljiyam car race