2024- ம் ஆண்டிற்கான சிறந்த நடிகர் விருதை பெற்றார் 'டோவினோ தாமஸ்'...! குஷியில் ரசிகர்கள்...!!!
Tovino Thomas won Best Actor Award for year 2024
மலையாள திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக திகழ்பவர் 'டோவினோ தாமஸ்'. இவர் தமிழில் 'மாரி, மின்னல் முரளி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

மேலும், விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் டோவினோ தாமஸுக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.
இதில் அண்மையில், பிருத்விராஜ் இயக்கத்தில் வெளியான 'எல் 2 எம்புரான்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், 2024-ம் ஆண்டிற்கான 48-வது கேரள திரைப்பட விமர்சகர்கள் விருது வழங்கும் விழாவில் "ஏஆர்எம் மற்றும் அன்வெஷிப்பின் கண்டெத்தும்" ஆகிய படங்களுக்காக சிறந்த நடிகருக்கான விருது டோவினோ தாமஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
English Summary
Tovino Thomas won Best Actor Award for year 2024