இந்த பண்பை ஏ.ஆர்.முருகதாசிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன் - அமீர் கான் நெகிழ்ச்சி.!
Aamir Khan viral speech
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் சூர்யா நடித்த 'கஜினி' திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்திருந்தார். இந்நிலையின் கஜினி படபிடிப்பின் போது ஏ.ஆர். முருகதாஸிடம் இருந்து கற்றுக் கொண்டது தொடர்பாக அமீர்கான் பேசியுள்ளார்.
அவர் பேசியிருப்பதாவது, ஏ.ஆர். முருகதாஸ் ஒரு தனித்துவமான நபர். திரைப்படத்தின் சில காட்சிகள் குறித்து ஒரு அறிவுரை வழங்கினால் அவரின் கருத்தை வெளிப்படையாக தெரிவிப்பார்.
![](https://img.seithipunal.com/media/ami-96hbe.jpg)
மற்றவர்கள் அது பிடிக்கவில்லை என தெரிவித்தாலும் நுட்பமான முறையில் கூறுவார். ஆனால் ஏ.ஆர். முருகதாஸுக்கு பிடிக்கவில்லை என்றால் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் மனதில் தோன்றுவதை தெரிவித்துவிடுவார்.
அதே போல் அவருக்கு ஏதாவது பிடித்து விட்டால் உடனடியாக பாராட்டுவார். இந்த பண்பை நான் அவரிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதற்கு பிறகு சல்மான் கானின் சிக்கந்தர் திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.