மாநிலத்தின் அமைதியை கெடுக்க விரும்பினால் ஏமாந்து போவீர்கள்; பாஜகவை எச்சரிக்கும் முதல்வர்..! - Seithipunal
Seithipunal


திமுக சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் அறிக்கையை கண்டித்து  சென்னை ஆவடியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கண்டன பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

தமிழக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்பதால் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. தமிழகத்திற்கு நீங்கள் நிதி அளிக்காமல் இருக்கலாம், நாங்கள் நீதியை அடையாமல் விடமாட்டோம். தமிழகத்திற்கு பல நிறுவனங்கள் மற்ற மாநிலம் செல்வதாக ஆளுநர் எவ்வாறு கூறுகிறார் ? நம்மிடம் உள்ள நிறுவனங்கள் மற்ற மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்பது தான் ஆளுநரின் ஆசை.

ஆளுநர் ஆர்.என்.ரவியின் பாராட்டு தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை. நகர்ப்புற வளர்ச்சியில் இந்தியாவிற்கே சென்னை தான் முன்னுதாரணம் என பாஜக மூத்த தலைவரே கூறியுள்ளார்.

ஆளுநர் ரவியும், பாஜக தலைவர் அண்ணாமலையும் தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும். ஆர்.என்.ரவியும், அண்ணாமலையும் பதவியில் இருந்தால் தான் நமக்கு அவர்களே பிரச்சாரம் செய்வார்கள். ஆன்மிகம் வேறு அரசியல் வேறு என்று பகுத்தறிந்து பார்ப்பதே தமிழ்நாடு. மாநிலத்தின் அமைதியை கெடுக்க விரும்பினால் ஏமாந்து போவீர்கள், திருந்துங்கள், அல்லது திருத்தப்படுவீர்கள்.

மத்திய அரசின் உரையை ஜனாதிபதி வாசிப்பதை போல் மாநில அரசின் உரையை ஆளுநர் வாசிப்பதே மரபு. குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது மாநில அரசின் உரையை பேரவையில் வாசித்தார் காங்கிரஸ் அரசு நியமித்த ஆளுநர்.

உ.பி கும்பமேளாவில் 40 ரேப் பலியான நிலையில் 30 பேர் பலி என கணக்கு காட்டுகிறது பாஜக அரசு. கும்பமேளாவில் நடந்ததை நியாயப்படுத்தி பேசுகிறார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister Stalin warns BJP


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->