மீண்டும் பிக்பாஸில் ஆரியா?! அவரே வெளியிட்ட அசத்தல் தகவல்.! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த மொழியில் வெளியாகினாலும் அதற்கு அந்தந்த மொழிகளில் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.  அந்த வகையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதனால்தான் வெற்றிகரமாக 4 சீசன்களை கடந்து பிக் பாஸ் 5 வது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது. 

18 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது பல்வேறு எலிமினேஷன்கள் நடைபெற்றது. மேலும், வைல்டு கார்டு எண்ட்ரீயும் நடைபெற்று வந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அபிஷேக் மீண்டும் நிகழ்ச்சிக்குள் வைல்ட் கார்டு மூலம் என்ட்ரியாகி மீண்டும் எலிமினேட் செய்யப்பட்டார்.

மொத்தம் 18 போட்டியாளர்கள் மற்றும் 2 வைல்ட் கார்ட் என்ட்ரி என 20 பேர் கலந்துக்கொண்ட போட்டியாளர்களில் தற்போது, ராஜு, அக்ஷரா, பாவனி, சிபி, தாமரை, நிரூப், வருண், ப்ரியங்கா, அபினய், சஞ்சீவ், அமீர் உள்ளிட்ட  போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இந்த பிக்பாஸ் சீசன் குறித்து கடந்த எபிசோட் டைட்டில் வின்னரான ஆரியிடம் உங்களுக்கு பிடித்த போட்டியாளர் யார் என்று கேட்கப்பட்டதற்கு அவர், இந்த முறை அனைவரும் வித்தியாசமாக விளையாடி வருவதால் அப்படி குறிப்பிட்டு சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர் மீண்டும் இந்த சீசனில் நுழைய வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aari Arjunan again in biggboss house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->