தேசியவிருது கிடைத்தது குறித்து.. 'பொம்மி' அபர்ணா பாலமுரளி கூறிய விஷயம்.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் வெளியான மிகச்சிறந்த திரைப்படங்களுக்கு மத்திய அரசு திரைப்பட கலைஞர்களை பாராட்டி கௌரவித்து விருதுகளை வழங்கி வருகிறது. 

ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கும், அந்த துறையின் சிறந்த விருதுகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், நேற்று 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் 2020ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 21 வரை சென்சார் செய்யப்பட்ட படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு மொத்தமாக ஐந்து விருதுகள் கிடைத்தன. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த இசை அமைப்பாளர் உள்ளிட்ட விருதுகள் கிடைத்தது.

இதில் ஹீரோயினாக நடித்த அபர்ணா பாலமுரளி விருது கிடைத்தது குறித்து, அவர், "எனக்கு விருது கிடைக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த விருது எனது நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதற்கு காரணமாக இருந்த இயக்குனர் சுதா கொங்கராவிற்க்கு நன்றி. சூர்யா சார் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோருக்கு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Abarna balamurali about her award


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->