நடிகர் அஜித் வாங்கிய புதிய சொகுசு கார்! இணையத்தில் வைரல்!
Actor Ajith bought a new luxury car Viral on the Internet
நடிகர் அஜித் குமார் ஒரு தீவிரமான கார் பிரியர் என்பது ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் ஆகும். இதன்படி, தற்போது நடிகர் அஜித் புதிய போர்ச் GT3 RS சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் அஜித். இவர் தற்பொழுது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் அஜித் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து கார் ரேஸில் மற்றும் பைக் ரேஸ் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவரது இருசக்கர வாகனத்தில் பல ஊர்கள் சென்று தன்னுடைய நேரத்தை அதிகமாக செலவிட விரும்பவர்.
இதற்கிடையில், நடிகர் அஜித் இன்று புதிய போர்ச் GT3 RS சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் விலை 4 கோடி ரூபாய் ஆகும். இதற்கு முன் நடிகர் அஜித் ஃபெராரி காரை 9 கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார்.
மேலும், இந்த புதிதாக கார் வாங்கிய போட்டோவை சற்றுமுன் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, நடிகர் அஜித் காருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரளாகி வருகிறது.
English Summary
Actor Ajith bought a new luxury car Viral on the Internet