2024-ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற நியூசிலாந்தின் அமெலியா கெர்..! - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகின்றது. 

அதாவது ஆண்டு முழுவதும் வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்ட விதத்தை கணக்கில் கொண்டு இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

அந்த வகையில், 2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு 04 பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்திருந்தது. அதன்படி சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்படுபவருக்கு 'ரேச்சல் ஹேஹோ பிளின்ட் டிராபி' விருது வழங்கி கவுரவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதில் நியூசிலாந்தின் அமெலியா கெர், தென் ஆப்பிரிக்க வீராங்கனை லாரா வால்வார்ட், ஆஸ்திரேலியாவின் அன்னாபெல் சதர்லேண்ட் மற்றும் இலங்கையின் சமாரி அதபத்து ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இவர்களில் சிறந்த வீராங்கனையாக அமெலிய கெர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ரேச்சல் ஹேஹோ பிளின்ட் டிராபி விருது வழங்கப்படயுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://x.com/ICC/status/1884111789585228176


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amelia Kerr wins 2024 Womens Player of the Year award


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->