நடிகர் அஜித் - ஷாலினியின்  திருமண நாளை ட்ரெண்டாக்கிய ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித் - ஷாலினியின்  திருமண நாளை ட்ரெண்டாக்கிய ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் அஜித். இவர் கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி நடிகை ஷாலினியை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்தவர்களும் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் அஜித் மற்றும் ஷாலினி திருமணம் செய்து கொண்டு இன்றுடன் 23 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையடுத்து இருவரும் தங்களது குடும்பத்தினருடன் இந்த விழாவை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டனர். 

இருப்பினும், இந்த விழாவை சிறப்பிக்க அவரது ரசிகர்கள் முடிவு செய்து அதற்கான கொண்டாட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தனர். அஜித் மற்றும் ஷாலினியின் திருமண நாளில் இருவரையும் வாழ்த்தி சமூக ஊடகங்களில் அவர்களது ரசிகர்கள் பல்வேறு புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். 

அதுமட்டுமல்லாமல், ரசிகர்கள் #ஷாலினிஅஜித்குமார் என்ற ஹேஷ் டேக்கையும் டிரெண்டாக்கி வருகின்றனர். அஜித் ஷாலினியின் திருமணநாளை அவரது ரசிகர்கள் மிக பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor ajith shalini wedding day fans make hastag


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->