இனி அன்னதான சாப்பாட்டுடன் மசால் வடை..திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு!
Now with the food and the meal. Tirupati Devasthanams
திருப்பதியில் பக்தர்களுக்கு அன்னதான சாப்பாட்டுடன் மசால் வடை வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துவருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஏழுமலையான தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்காக 24 மணி நேரமும் அன்னதான உணவு வழங்கப்பட்டு வருகிறது.இந்தநிலையில் இதனிடையே, பக்தர்களுக்கு அன்னதான சாப்பாட்டுடன் மசால் வடை வழங்க அறங்காவலர் குழு முடிவு செய்தது.
மேலும் இதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று முதல் பக்தர்களுக்கு இலவச உணவு உடன் மசால்வடை வழங்கும் திட்டத்தை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு இன்று திருமலையில் உள்ள அன்னதான கூடத்தில் துவக்கி வைத்தார்.

முன்னதாக இந்த திட்டம் பரிசோதனை அடிப்படையில் சில நாட்கள் திருப்பதி மலையில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து இந்த நிலையில் இன்று அன்னதான கூடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின், அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, பக்தர்களுக்கு சாப்பாட்டுடன் வடைகளை பரிமாறினார் .
அதனை தொடர்ந்து அப்போது பேசிய அவர், இதற்காக தினமும் சுமார் 35 ஆயிரம் மசால்வடைகள் தயார் செய்யப்படும் என்றும் அதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், மனித வளம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று அப்போது குறிப்பிட்டார்.
English Summary
Now with the food and the meal. Tirupati Devasthanams