நடிகர் அர்ஜின் தாஸின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! - Seithipunal
Seithipunal


நடிகர் அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நட்சத்திர நடிகரான அர்ஜுன் தாஸ், தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்து மக்களிடையே ஈர்க்கப்பட்டார்.

தொடர்ந்து, அநீதி, ரசவாதி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் இணைந்துள்ள நடிகர் அர்ஜுன் தாஸ், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து அதில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் ஒன்றையும் இணைத்து காதல் குறியீட்டுடன் காதலியை முகம் காட்டாமல் பதிவிட்டிருந்தார்.


இதற்கிடையே கடைசியாக அர்ஜுன் தாஸ் நடித்த போர், ரசவாதி படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இயக்கும் பாம்  படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள நிலையில், டி.இமான் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Arjin Das new movie first look poster release


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->