நடிகர் போஸ் வெங்கட் வீட்டில் இன்று ஒரே நாளில் 2 உயிரிழப்பு.. கண்ணீரில் குடும்பத்தினர்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2020ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி சீரியல் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகர் போஸ் வெங்கட். அதனைத் தொடர்ந்து தனது யதார்த்த நடிப்பால் சினிமாவிலும் கால்தடம் பதித்து தனக்கென தனியிடத்தை பிடித்தார். 

அதன்படி, குணசேத்திர நடிகர் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வருகிறார். மேலும், இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் நடிகராக மட்டுமில்லாமல் கடந்த 2020ம் ஆண்டு வெளியான கன்னிமாடம் என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் போஸ் வெங்கட் குடும்பத்தில் இன்று ஒரே நாளில் 2 உயிரிழப்புகள் ஏற்பட்டு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி இன்று காலை உயிரிழந்த நிலையில், அவரது இறுதி சடங்கிற்கு சென்ற போஸ் வெங்கட்டின் சகோதரர் ரங்கநாதனும் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Bose venkat sister and brother passed away today


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->