தவெக கட்சியில் சர்ச்சையான அணி..? தலைவர் விஜய் என்ன சொல்ல போகிறார்..?
The Tamil Nadu Victory Party has released a list of 28 teams
தமிழக வெற்றிக் கழகத்தில் 28 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்த பட்டியலை தவெக வெளியிட்டுள்ளது.
இதில் முக்கியமாக திருநங்கைகள், காலநிலை மாற்றம், தகவல் சரிபார்ப்பு, இளைஞர் அணி, குழந்தைகள் அணி உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், குழந்தைகள் அணி என்ற அணியை த.வெ.க. உருவாக்கியுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இந்தியாவில் அரசியல் கட்சிகளில் குழந்தைகளை சேர்க்க முடியாது.
தமிழக வெற்றிக் கழக அணிகளின் பட்டியல்:
1. தகவல் தொழில்நுட்ப பிரிவு
2. வழக்கறிஞர் பிரிவு
3. மீடியா பிரிவு
4. பிரச்சாரம் மற்றும் பேச்சாளர்கள் பிரிவு
5. பயிற்சி மற்றும் தொண்டர் மேம்பாட்டு பிரிவு 6. உறுப்பினர் சேர்க்கை பிரிவு
7. காலநிலை ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பிரிவு
8. வரலாற்று தரவு ஆராய்ச்சி & உண்மைச் சரிபார்ப்பு பிரிவு
9. திருநங்கைகள் பிரிவு
10. மாற்றுத்திறனாளிகள் பிரிவு
11. இளைஞர்கள் பிரிவு
12. மாணவர்கள் பிரிவு
13. பெண்கள் பிரிவு
14 இளம் பெண்கள் பிரிவு
15. குழந்தைகள் பிரிவு
16. தொண்டர்கள் பிரிவு
17 வர்த்தகர் பிரிவு
18 மீனவர் பிரிவு
19: நெசவாளர் பிரிவு
20. ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிரிவு
21 தொழிலாளர் பிரிவு
22 தொழில்முனைவோர் பிரிவு
23. அயல்நாட்டில் வசிப்பவர் பிரிவு
24 மருத்துவர்கள் பிரிவு
25 விவசாயிகள் பிரிவு
26. கலை. கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பிரிவு
27. தன்னார்வலர்கள் பிரிவு
28. அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்
English Summary
The Tamil Nadu Victory Party has released a list of 28 teams