நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்.!! - Seithipunal
Seithipunal


வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து மிகவும் பிரபலமான தமிழ் சினிமாவின் கோச்சித்திர நடிகரும் வில்லன் நடிகருமான டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். 

கடந்த 2000 ஆவது ஆண்டு வெளியான சித்தி என்ற நெடுந்தொடரில் டேனியல் என்ற கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானதால் பாலாஜி என்ற தனது பெயரை டேனியல் பாலாஜி என மாற்றிக்கொண்டார். 

இவர் தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென மாற அழைப்பு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் டேனியல் பாலாஜி உயிரிழந்துள்ளார். 

டேனியல் பாலாஜியின் உயிரிழப்பு தமிழ் திரை உலகினரையும் அவருடைய ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் வடசென்னை மற்றும் பிகில் படங்களில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Daniel balaji passed away due to heart attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->