வின்னர் 2 படம் - மரண அப்டேட் கொடுத்த படக்குழு.!  - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் 'வைகாசி பொறந்தாச்சு' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். 90-களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவரான இவர் கடந்த 2003-ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வின்னர் என்ற படத்தில் நடித்தார்.

இந்த படத்தில் பிரசாந்துடன் நடிகை கிரண், நம்பியார், வடிவேலு, ரியாஸ் கான் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்தப் படம் ஒரு ஆக்சன் கலந்த காதல் கதைக்களத்தில் உருவாகி மிகப்பெய்ய அளவில் வெற்றியடைந்தது. 

இதனால், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று நடிகர் பிரசாந்த் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது வின்னர் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. 

விரைவில், இந்தப்படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில், இயக்குனர் சுந்தர் சி, நடிகர் பிரசாந்த் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நேரில் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

winner 2 movie update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->