10 கோடி ரூ. இழப்பீடு; நயன்தாரா மீது தனுஷ் தொடர்ந்த வழக்கு; தீர்ப்பை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம்..! - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷ் , நடிகை நயன்தாராவிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சி பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.நிகழ்வு சார்ந்த  ஆவண படம் தொடர்பான வீடியோ பதிவுகளை, மும்பையை சேர்ந்த 'நெட்பிலிக்ஸ்' நிறுவனம் வெளியிட்டது. 

இதில், நடிகர் தனுஷ் நிறுவனமான 'வொண்டர்பார் பிலிம்ஸ்' தயாரித்த 'நானும் ரவுடி தான்' படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளும் இடம் பெற்றிருந்தன.

 

அதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, நயன்தாராவுக்கு, நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு நயன்தாரா தனுஷை கடுமையாக விமர்சித்து பதிவு வெளியிட்டு இருந்தார். 

இந்த நிலையில், நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன், மும்பையை சேர்ந்த, நெட்பிலிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக, தனுஷ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் 'படத்தில் நயன்தாராவின் நடிப்பு, குரல், எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமானது.

தற்போது, நெட்பிலிக்ஸ் நிறுவனம், எங்கள் நிறுவனத்துக்கு சொந்தமான வீடியோ காட்சிகள் உடன், நயன்தாரா திருமண வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது. இதனால், எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இழப்பீடாக, 10 கோடி ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தனுஷ் மற்றும் நெட்பிலிக்ஸ் தரப்பில் காரசாரமான வாதம் நடந்துள்ளது.

காப்புரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது. ஆவணப்படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள், 03வது நபர் எடுத்தது. அப்படியே வழக்கு போட்டாலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது.

காஞ்சிபுரத்திலோ அல்லது மும்பையிலோ தான் வழக்கு போட முடியும். எனவே, தனுஷ் தரப்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், என்று வாதிட்டுள்ளனர்.

இது குறித்து தனுஷ் தரப்பில் இருந்து, ஆவணப்படத்தில் உள்ள நானும் ரவுடிதான் படம் தொடர்பான காட்சிகள் அனைத்தும் தனது படப்பிடிப்பு தளத்தில் தான் எடுக்கப்பட்டது. படத்தின் அனைத்துக் காட்சிகளும் தனுஷூக்கு சொந்தமானவை.

ஆடை, சிகை அலங்காரம் முதல் அனைத்தும் கம்பெனிக்கு சொந்தம் என தெரிந்தே பட ஒப்பந்தத்தில் நயன்தாரா கையெழுத்திட்டார். பட ஒப்பந்தம் கையெழுத்தான போது சென்னையில் தான் அலுவலகம் இருந்தது. எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும், என்று வாதிடப்பட்டுள்ளது.

ஆனால், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush filed a case against Nayanthara seeking compensation of Rs 10 crore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->