இன்று  பாடல் வெளியானது..நாளை படம் ரிலீஸ்!  - Seithipunal
Seithipunal


யோகி பாபு நடித்துள்ள 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இந்தநிலையில் அந்த படத்தின் 'கும்ப கும்ப' என்ற பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

 தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார் நடிகர் யோகி பாபு . நெல்சன் இயக்கிய 'கோலமாவு கோகிலா' படத்தில் மூலம் நடிகர் யோகி பாபுவின் நடிப்பு பட்டிதொட்டி எங்கும் பரவியது. இதையடுத்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மண்டேலா' படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமான நடிகர் யோகி பாபு அதன் பின்னர் 'போட், தி கோட், டீன்ஸ்' போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தற்போது விடாமுயற்சி, தி ராஜா சாப், பூமர் அங்கிள் ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவை கலக்கிவருகிறார்.

இந்தநிலையில் தற்போது யோகிபாபு 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் யோகி பாபுவுடன் செந்தில், அகல்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  'சகுனி' படத்தை இயக்கிய ஷங்கர் தயாள் இயக்கிஉள்ள   இப்படத்தின் டீசரை நடிகர் கார்த்தி சமீபத்தில் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வைரலான நிலையில் இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

https://youtu.be/Hm59GDcZVu0

இந்த நிலையில் தற்போது பாடகி மானசி பாடியுள்ள இப்படத்தின் 'கும்ப கும்ப' என்ற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடல் வரிகளை சங்கர் தயாள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The song was released today. The film will be released tomorrow


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->