தனியார் மருத்துவ கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க காலதாமதம்.. NMC நிர்வாகத்திற்கு 50- ஆயிரம் அபரதம் விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் புதுச்சேரியில் உள்ள 3- தனியார் மருத்துவ கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஏற்படுத்திய NMC நிர்வாகத்திற்கு  சென்னை உயர் நீதிமன்றம் 50- ஆயிரம் அபரதம் விதித்துள்ளது.

புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் சார்பாக  சென்னை உயர் நீதிமன்றத்தில்  முறைகேடுகள் செய்து மாணவர்களை சேர்த்த   பிம்ஸ், மணக்குளவினாயகர், வெங்கடேஸ்வரா  மருத்துவ கல்லூரிகள் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு கூடுதலாக 105 இடங்களை நான்கு ஆண்டுகள் வழங்க வேண்டும் வழங்க வில்லை என்றால் 4-ஆண்டுகளுக்கு மூன்று கல்லூரிகளிலும்  NMC  105 இடங்களை ரத்து செய்து அபராதம் விதிக்க வேண்டும் என்று NMC நிர்வாகத்திற்கு புகார் அளித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர்  ரவி, பிரியா ரவி மூலம் 2018 ஆம் ஆண்டு சங்கத்தின் பஞ்சாபிகேசன் சார்பாக வழுக்கு தெடரபட்டது .

இந்தநிலையில் NMC நிர்வாகம் தொடர்ந்து கால அவகாசம் கேட்டு கல்லூரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதில் அளிக்காமல் காலதாமதம் ஏற்படுத்தியதால்  சென்னை உயர் நீதிமன்றம்  NMC- நிர்வாகத்திற்கு 50-ஆயிரம்  அபராதம் விதித்து  வழக்கை  14-2-2024 ஒத்திவைத்து  வழக்கன்று NMC பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்தது.

மேலும் 14-02-2024 அன்று புதுச்சேரி அரசும் எங்களுடன் புதுச்சேரி மாணவர்கள் நலன் கருதி 105 மருத்துவ இடங்களை புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு அரசு இடஒதுக்கீட்டில் நான்கு ஆண்டுகள் வழங்க வேண்டும். முறைகேடுகள் செய்த கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கத்துடன் சேர்ந்து  வாதிட வேண்டும் என புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் தலைவர் நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delay in taking action against private medical colleges Madras HC slaps Rs 50,000 fine on NMC


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->