வெள்ளிக்கிழமையில் தமிழ்த் திரையுலக கலைக்கட்டுகிறது: இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் 5 படங்கள்!
Tamil film industry on Friday 5 films releasing in theaters this week
பொங்கல் பண்டிகைக்கு பிறகு தமிழ்த் திரையுலகில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வாரம் ஜனவரி 24ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, தமிழ் திரையுலகில் ஐந்து புதிய படங்கள் வெளியிடப்படுகின்றன. சுந்தர் சி, யோகி பாபு, குட் நைட் மணிகண்டன் உள்ளிட்ட பிரபலங்களின் படங்கள் வெளியாவதால் திரையரங்குகள் மீண்டும் ரசிகர்களால் நிரம்பும் சூழல் உருவாகியுள்ளது.
1. பாட்டில் ராதா
குரு சோமசுந்தரம், காஞ்சனா நடராஜன், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம், சென்னையில் பிரமோஷன் நிகழ்ச்சியுடன் வலுவான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இது ஒரு உணர்ச்சிகரமான குடும்பக் கதை என்றார் படக்குழு.
2. குடும்பஸ்தன்
புதுமுக இயக்குநர் ராஜேஸ்வரி காளிசாமி இயக்கியுள்ள குடும்பஸ்தன் படத்தில், வாழ்க்கையில் கடன், இஎம்ஐ போன்ற பிரச்னைகளை சமாளிக்கும் ஒரு சாதாரண குடும்பஸ்தனாக மணிகண்டன் நடித்துள்ளார். குட் நைட், லவ்வர் படங்களுக்குப் பிறகு ஹீரோவாக மணிகண்டனின் முத்திரை உருவாகும் படம் இது.
3. வல்லான்
சுந்தர் சி முக்கிய வேடத்தில் நடித்துள்ள வல்லான், இயக்குனர் மணி சேயான் கைவண்ணத்தில் உருவாகியுள்ளது. இது ஆக்ஷன் திரில்லர் படமாக வருவதால் சுந்தர் சியின் புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. அரண்மனை மற்றும் காமெடி திரைப்படங்களுக்கு அப்பால், அவரின் புதிய பரிமாணத்தை வெளிக்காட்டும் படம் இது.
4. குழந்தைகள் முன்னேற்ற கழகம்
யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் இந்த நகைச்சுவை திரைப்படத்தை சங்கர் தயாள் இயக்கியுள்ளார். யோகி பாபு இந்த வருடம் ஹீரோவாக முதன்முறையாக நடிக்கும் படம் என்பதால், அவரின் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்க்கின்றனர்.
5. மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்
யூட்யூப் புகழ் ஹரிபாஸ்கர் மற்றும் பிக் பாஸ் புகழ் லாஸ்லியா நடிப்பில் உருவான முழுநீள நகைச்சுவை திரைப்படம் இது. ஹரிபாஸ்கரின் யூட்யூப் ரசிகர்கள் இத்திரைப்படத்துக்கு கூடுதல் ஆதரவாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாரம் வெளியாகும் இந்த ஐந்து படங்களும் ரசிகர்களை தியேட்டர்களுக்கு திரும்ப செய்யும் என்று நம்பப்படுகிறது. குடும்பம், காமெடி, ஆக்ஷன் என பல்வேறு வகை கதைகள் கொண்டுள்ள இந்த படங்கள், வார இறுதியில் ரசிகர்களுக்கு அருமையான காட்சிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
English Summary
Tamil film industry on Friday 5 films releasing in theaters this week