10 விருதுகளை அள்ளி தேசத்தையே திரும்பிப் பார்க்கச் செய்த தமிழ்த் திரையுலகம் - கமல்ஹாசன் பாராட்டு.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு ஆண்டு தோறும் நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களுக்கும், ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகளையும் வழங்கி, பாராட்டியும், கவுரவப்படுத்தியும் வருகிறது.

நேற்று 68-வது தேசிய திரைப்பட விழா நடைபெற்றது. இதில், சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, இசை, இயக்கம், வசனம் உள்ளிட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ் சினிமா நட்சத்திரங்கள் 10 விருதுகளை பெற்றுள்ளனர்.
 சிறந்த நடிகர் - சூர்யா
சிறந்த நடிகை - அபர்ணா முரளி
பின்னணி இசை - ஜி.வி.பிரகாஷ் குமார்
சிறந்த திரைக்கதை - சூரரைப்போற்று
சிறந்த படம் - சூரரைப் போற்று

மேலும், வசந்த் இயக்கத்தில் வெளிவந்த சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு சிறந்த தமிழ் படம், சிறந்த துணை நடிகை, சிறந்த எடிட்டிங் ஆகிய பிரிவுகளில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த வசனகர்த்தா மற்றும் அறிமுக இயக்குனருக்கான விருதுகள் யோகி பாபு நடித்த மண்டேலா படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக தமிழ் திரையுலகத்திற்கு மொத்தம் 10 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

அந்த வகையில், உலகநாயகன் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா என ஒட்டுமொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம். விருதாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.’ என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor kamalahasan wishes to national award winners


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->