சற்றுமுன் | வருமான வரித்துறை ரெய்டு : நடிகர் கார்த்தி பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் பிரபல திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்ட பல தயாரிப்பு நிறுவனங்களின் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அண்மையில் வெளியான திரைப்படங்கள் வருமானத்துக்கு அதிகமான, கணக்கு காட்டப்படாத பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வந்ததாகவும், வரி ஏய்ப்பு நடந்ததாகவும் வந்த புகார் அடிப்படையில் தற்போது வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

இதேபோல், பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ், மற்றும் ஞானவேல் வீட்டிலும், அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.

மேலும், திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, எஸ் ஆர் பிரபாகரன் உள்ளிட்ட பல தயாரிப்பாளர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

இந்நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்திக்கிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு அவர், "சினிமா தயாரிப்பாளர்கள் மீது நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனையை வழக்கமான ஒன்றாகவே பார்க்கிறேன்.

யாரிடம் சோதனை நடத்த வேண்டும் என குலுக்கல் அடிப்படையில் முடிவெடுக்கிறார்கள். சோதனையில் அரசியல் உள்நோக்கம் இல்லை" என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor karthi say about it raid


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->