தெலுங்கு அரசியலில் சிக்கித் தவித்த நடிகர் கார்த்தி!...மன்னிப்பு கேட்டு எக்ஸ் தளத்தில் பதிவு! - Seithipunal
Seithipunal


உங்கள் மீது வைத்துள்ள மதிப்பால், நான் தெரியாமல் பேசிய விஷயங்களுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று, நடிகர் கார்த்தி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கார்த்தியின் 27-வது படமான மெய்யழகன் வரும் 27-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை 96 பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கிய நிலையில், படத்தின் தெலுங்கு பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

இதில், நடிகர் கார்த்தியிடம் தொகுப்பாளர் ஒருவர் லட்டு வேண்டுமா என்று கேட்டதற்கு, நடிகர் கார்த்தி அது சென்சிடிவ் விஷயம் என்றும், எனக்கு லட்டே வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

தொடர்ந்து நடிகர் கார்த்தியின் இந்த பேச்சுக்கு லட்டை கேலிக்குரிய பொருளாக்குவதா? என்று ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், உங்கள் மீது வைத்துள்ள மதிப்பால், நான் தெரியாமல் பேசிய விஷயங்களுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும், வெங்கடேஸ்வராவின் பக்தனாக நம் கலாசாரத்தை எப்போதும் மதிப்பவன் நான் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor karthi stuck in telugu politics asked for forgiveness and registered on x site


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->