வெற்றிநடைபோடும் ராயன் - தனுஷிற்கு நடிகர் கார்த்தி வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் தானே இயக்கி நடித்துள்ள திரைப்படம் ராயன். அண்ணன் தம்பி கதையாக உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிரச் செய்துள்ளது. அவரின் 50 ஆவது படமான இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என்று பல முன்னணி நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் நடிகர் தனுஷ். ஏ.ஆர்.ரகுமான் இசையமைதுள்ள இந்தப் படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

இந்த நிலையில், இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழை அளித்துள்ளனர். இதனையொட்டி தனுஷிற்கு நடிகர் கார்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "50வது படத்திற்கு வாழ்த்துகள் தனுஷ். உங்களின் அயராத உழைப்புக்கும், சினிமா மீதான ஆர்வத்துக்கும் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகள். ராயன் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor karthi wishes to actor dhanush for raayan movie


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->