எதிர்க்கட்சிகளின் அடுத்த பிளான் என்ன?....நாடாளுமன்றத்தில் ஆலோசனை கூட்டம்!
What is the next plan of the opposition consultation meeting in parliament
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். மேலும், நவம்பர் 26-ம் தேதியான நாளை அரசியலமைப்பு தினத்தின் 75-வது ஆண்டு விழா நாடாளுமன்றத்தின் பழைய மைய மண்டபத்தில் கொண்டாடப்பட உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு நேற்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. அந்த வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதான குழு அறையில் காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் கூடியது. இதில், பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் ஜெய்ராம் ரமேஷ், திமுக சார்பில் திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர் கார்கே அலுவலகத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். சற்று நேரத்தில் கூட்டம் தொடங்க உள்ள நிலையில், அதானி மீது அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள லஞ்ச புகார், சாதிவாரி கணக்கெடுப்பு, மணிப்பூர் விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
What is the next plan of the opposition consultation meeting in parliament