மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டு பிரிந்த உயிர்....நடிகர் கிங்காங்கின் தாயார் காலமானார்....திரைத்துறையினர் இரங்கல்
Actor King Kongs mother passes away after wishing her son on his birthday The film industry mourns
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழும் கிங்காங், நடிகர் ரஜினிகாந்தின் அதிசயபிறவி படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ்சினிமாவில் நடித்து வருகிறார்.
மேலும் அவ்வப்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று, தனது காமெடியால் மக்களின் மனங்களை கட்டி ஈர்த்துள்ளார். இந்தநிலையில், நடிகர் கிங்காங்கின் தாயார் காசி அம்மாள் இன்று அதிகாலை 1.30' மணிக்கு உயிரிழந்தார்.
நடிகர் கிங்காங்கின் பிறந்தநாளான இன்று அதிகாலை 12.30 மணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை அவரது தாயார் தெரிவித்துள்ளார். 72 வயதான அவரது தாயார், சற்று நேரத்தில் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. நடிகர் கிங்காங் தனக்கு எல்லாமுமாக இருந்த தனது தாயார் மறைந்ததை எண்ணி பெரும் துயரத்தில் உள்ளார்.
இந்த நிலையில், உறவினர்கள் மற்றும் திரைத்துறை நண்பர்கள், பிரபலங்கள் கிங்காங்கின் பிறந்த நாளில் தனது தாயாரை இழந்ததால் எவ்வாறு ஆறுதல் கூறுவது எனத் தெரியாமல் அவரை தேற்றி வருகின்றனர். மேலும் நடிகர் தாயார் மறைவு அவரது ரசிகர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Actor King Kongs mother passes away after wishing her son on his birthday The film industry mourns