சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்..மாற்றுத் திறனாளிகளுக்கு மாநில விருது!
International Day of Persons with Disabilities State Award for Differently Abled
புதுச்சேரி சமூக நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.இந்தவிழாவில்துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில விருதுகளை வழங்கினர்.
புதுச்சேரி அரசு சார்பில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது.
இந்தவிழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி இவ்விழாவை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றி மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில விருதுகளை வழங்கினர்.அதனைத்தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கினார்.
விழாவில் 29 மாற்றுத் திறனாளிகளுக்கு வெவ்வேறு பிரிவுகளின் கீழ் ரொக்கப் பரிசுடன் கூடிய மாநில விருதுகள் வழங்கப்பட்டன. 10 பார்வைத்திறன் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மடிக்கணிணிகள் வழங்கப்பட்டன. 13 மாற்றுத்திறனாளி தம்பதியர்களுக்கு ரூ.1,00,000/- வீதம் திருமண ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. 250 செவிதிறன் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி சமூக நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.இந்தவிழாவில் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
English Summary
International Day of Persons with Disabilities State Award for Differently Abled