பப்லுவுக்கு அல்வா கொடுத்த ஷீத்தல்.!முடிவுக்கு வந்தது ரோமியோ - ஜூலியட் காதல்!
Sheetal gives halwa to BabluRomeo and Juliet's romance comes to an end
காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை..பருவம் தப்பிய பயிர் விளைச்சலுக்கு ஆகாது என்று சொல்லுவார்கள்.அப்படிஒரு சம்பவம் ஓன்று தமிழ் சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் நடைபெறுவது உண்டு . 58க்கு 25 வயது பெண்ணுடன் வாழ ஆசை. ஏன் இந்த ஆசை அந்த நடிகருக்கு.காதலுக்கு கண் இல்லை என்று சொல்லுவார்கள் அப்படிப்பட்ட காதல் கதையைத்தான் தற்போது பார்க்கலாம். தமிழில் சுமார் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்தான் நடிகர் பிரித்திவிராஜ். பெங்களூரைச் சேர்ந்தவராக இருந்தாலும், பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான்.
சிறு வயதிலேயே இவர் மிகவும் அழகாக இருந்ததால்1975 ஆம் ஆண்டுவெளியான, எம்ஜிஆரின் 'நாளை நமதே' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். முதல் படத்திலேயே பிரபல இயக்குனர் கே எஸ் சேதுமாதவன் இயக்கத்தில், எம்ஜிஆர், லதா, சந்திரமோகன், வெண்ணிற ஆடை நிர்மலா, எம் என் நம்பியார், என ஜாம்பவான்களுடன் நடிக்க அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க பெரிய காரணமாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து சிவாஜி கணேசன் ,ரஜினிகாந்தின்,உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரித்திவிராஜ் தமிழில் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளுக்கும் நடித்து பிரபலமானார்.
நடிப்பு மட்டுமின்றி, தன்னுடைய பிசினஸிலும் அதிகம் கவனம் செலுத்தி வந்த பிரித்திவிராஜ்அஜித் - சிம்ரன் நடிப்பில் வெளியான 'அவள் வருவாளா' திரைப்படம் தான் அவரை உச்சத்துக்கு அழைத்து சென்றது . இதையடுத்து 'பெல்லி' படத்திற்காக சிறந்த வில்லன் நடிகருக்கான நந்தி விருதையும் பெற்றார்.
இப்படி நடிப்பதில் பெயரும் புகழும் வாங்கிய பப்லு பிரித்திவிராஜ் வாழ்க்கையில் சொதப்பிவிட்டார் என்றே சொல்லலாம்.. கடந்த 1994-ஆம் ஆண்டு பீனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு Ahed என்கிற மகன் ஒருவர் உள்ளார். 25 வயதுக்கு மேல் ஆகும் இவருர் ஆட்டிசம் குறைபாடு கொண்டவர் என்பதால் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளவில்லைவிரும்பவில்லை . தன்னுடைய மகன் மீது பப்லு பிரித்திவிராஜ் உயிரையே வைத்திருந்தாலும், சில கருத்து முரண்பாடு காரணமாக மனைவியை கடந்த 2022-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று அவரிடமிருந்து விலகிவிட்டார்.
இந்தநிலையில்தான் மலேசியாவைச் சேர்ந்த ஷீத்தல் என்பவருடன் ரிலேஷன்ஷிப் ஏற்பட்டு இருவருக்கும் திருமணம் ஆகி விட்டதாக செய்திகள் வெளியானது.இதனை மறுத்த பிரித்திவிராஜ் கூடிய விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை எங்களின் திருமணம் நடக்கவில்லை என்பதையும் கூறி இருந்தார்.
ஆனால் இது கடந்த ஆண்டு சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்பட்ட விஷயமாக மாறியது. ஒரு சிலர் இதனை விமர்சித்தாலும் இன்னும் சிலர், "பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான் உனக்கு என்ன? என்று " மீம்ஸ் போட்டு கலாய்த்தவர்களும் உண்டு . மேலும் தன்னுடைய காதலியின் பிறந்த நாளுக்கு பல லட்ச ரூபாய் செலவு செய்து அவருக்கு சூட் ரூம் புக் செய்து, இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரித்திவிராஜ் ஏகப்பட்ட பரிசு பொருட்களையும் வாங்கிக் கொடுத்து கோடிக்கணக்கில் செலவு செய்தார் என கூறப்பட்டதும் உண்டு .இப்படி நகையும் சதையுமாக இருத்த ஷீத்தலும் - பப்லு பிரித்திவிராஜூம் உருகி உருகி ரோமியோ ஜூலியட் ரேஞ்சுக்கு காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் இருவரும் பிரிந்ததாக கூறப்பட்டது. இதனை பப்லு உறுதி செய்யவில்லை என்றாலும் ஷீத்தல், பப்லு உடனான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் நீக்கி உறுதி செய்தார்..
பப்லு பிரித்திவிராஜ் தன்னுடைய 58 வயதில், 25 வயது பெண்ணான ஷீத்தல் என்பவரை காதலித்து வந்த நிலையில், தற்போது ஷீத்தல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆசை காதலி ஏமாற்றியதால் கடும் மன உளைச்சலில் இருக்கிறாராம் நடிகர் பிரித்திவிராஜ்.
பிரித்திவிராஜிடம் இருந்து பிரிந்த கையேடு, ஷீத்தல் தன்னுடைய நண்பரையே திருமணம் செய்து கொண்டுள்ளதாக புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார். கணவரின் முகத்தை காட்டவில்லை என்றாலும் மணமகள் கெட்டப்பில், தற்போது புகைப்படம் வெளியிட்டுள்ளார். ஷீத்தல் திருமணம் செய்து கொண்டுள்ள நண்பர் ஒரு தடகல விளையாட்டு வீரர் என கூறப்படுகிறது. மேலும் ஜிம்மில் பயிற்சியாளராக உள்ளாராம். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்களின் உடல் அமைப்பு ரவிவாஸ் கிளாசிக்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Sheetal gives halwa to BabluRomeo and Juliet's romance comes to an end