அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்..சமரசமின்றி நடவடிக்கை.. ரேவந்த் ரெட்டி கண்டனம்! - Seithipunal
Seithipunal



ஐதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது கற்களை வீசி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். தடுப்புச்சுவரை தாண்டி உள்ளே சென்ற அவர்கள் அங்கிருந்த பூந்தொட்டிகளை உடைத்து தங்களின் எதிர்ப்பை பதிவுசெய்தனர்.இந்த சம்பவத்துக்கு தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்திருந்த புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் 4-ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. அப்போது, நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுடன் படம் பார்க்க சந்தியா தியேட்டருக்கு வந்திருந்தனர். இருவரையும் காண தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.அப்போது கூட்டநெரிசலில் சிக்கி 35 வயதுடைய பெண் உயிரிழந்தார். அவரது மகனுக்கும் மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஜாமினில் சமீபத்தில் வெளியே விடப்பட்டார்.

இந்த சம்பவம்  தெலுங்கானா மாநில சட்டசபை வரை எதிரொலித்தது.இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டுவந்த வந்தநிலையில் ஐதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது கற்களை வீசி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தடுப்புச்சுவரை தாண்டி உள்ளே சென்ற அவர்கள் அங்கிருந்த பூந்தொட்டிகளை உடைத்து தங்களின் எதிர்ப்பை பதிவுசெய்தனர்.  இதையடுத்து அல்லு அர்ஜூன் வீட்டின்மீது தாக்குதல் நடத்திய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், அல்லு அர்ஜூன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக, அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், திரை பிரபலங்கள் வீடு தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் சமரசமின்றி டிஜிபி மற்றும் போலீஸ் கமிஷனர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Allu Arjuns house attacked Uncompromising action Revanth Reddy condemned


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->