பகாசூரன் நடிகர் நட்ராஜ்க்கு ஏற்பட்ட சோகம்! நம்முடைய கௌரவம் அதில் இல்லை என ஆதங்கம்!
Actor nataraj shared his sadness இந்த twitter
தமிழ் திரைப்பட நடிகரும், இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவருமான நட்டி என்கின்ற நடராஜ் தனக்கு நடைபெற்ற சோகமான சம்பவம் ஒன்றை சமூக ஊடகத்தில் பகிர்ந்து உள்ளார்.
தமிழின் பல திரைப்படங்களில் நடித்துள்ள நடராஜ் தற்போது பகாசுரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் அவர் காவல்துறை அதிகாரியாக வருவதாக டீசரின் மூலம் தெரிய வருகிறது.
இந்த நிலையில் அவர் தன்னுடைய சோகம் ஒன்றினை பொதுவெளியில் பகிர்ந்திருக்கிறார். வீடுகளுக்கு போடப்படும் டைல்ஸ் என்பது முதியோர்களின் எதிரி எனவும், அதனால் எஅவருடைய தாய் மாமன் இறந்து விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். குளித்துவிட்டு வந்த அவருடைய தாய் மாமன் கால் வழுக்கி கீழே விழுந்ததில், தலையில் அடிபட்டு உயிரிழந்தார் என்பதை அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் நம்முடைய கௌரவம் என்பது டைல்சில் இல்லை எனவும் முதியோர்களை காப்பதில் தான் இருக்கிறது எனவும் அவர் தன்னுடைய ஆதங்கத்தை வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்.
English Summary
Actor nataraj shared his sadness இந்த twitter