லால் சலாம் படத்தில் ரஜினிக்கு மனைவியாக இணையும் பிரபல நடிகை.!! யார் இவர்?
actor nirosha joint laal salaam movie
லால் சலாம் படத்தில் ரஜினிக்கு மனைவியாக இணையும் பிரபல நடிகை.!! யார் இவர்?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரஜினிகாந்த். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் குறிப்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் அதிகளவில் ரசிகர்களாக உள்ளனர்.
இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு டயலாக் எப்போவும் ரசிகர்களிடம் ஹிட் அடித்துவிடும். இவர் பேசும் டயலகுக்காகவே சிலர் படங்களைத் தியேட்டரில் சென்று பார்ப்பார்கள்.
இப்படி பல திறமைகளைக் கொண்ட ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ படத்தினை முடித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ படத்தில் இணைந்துள்ளார். இந்தப்படத்தை ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார்.
நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார். மேலும், இந்தப் படத்தில் பிரபல கிரிக்கெட்டரான கபில் தேவ்வும் இணைந்துள்ளார்.
இந்த நிலையில், நடிகை நிரோஷா "லால் சலாம்" படத்தில் ரஜினிகாந்தின் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடைசியாக 2021-ம் ஆண்டு ’ராஜவம்சம்’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
English Summary
actor nirosha joint laal salaam movie