மறைந்த தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் கண்கலங்கி பேசிய நடிகை ராதா.!
actor radha tribute vijayakant memorable place
தேமுதிக தலைவரும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருமான விஜயகாந்த் கடந்த மாதம் இறுதியில் விண்ணுலகு சென்றார். அவருடைய மறைவில் இறுதி நிகழ்வின் போது கலந்து கொள்ள முடியாத பல பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் விஜயகாந்துடன் 'அம்மன் கோவில் கிழக்காலே’, ‘மனக்கணக்கு’ உள்ளிட்டப் பல படங்களில் இணைந்து நடித்த நடிகை ராதா இன்று அவரது நினைவிடத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதன் பின்பு, பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “விஜயகாந்த் மிகவும் தன்மையான நபர். அவருடைய பிறந்தநாளின் போது தொலைபேசியில் பேசுவேன். சமீபத்தில், என்னுடைய மகள் திருமணத்திற்காக பத்திரிக்கை வைக்கப் போயிருந்தேன்.
அப்போது விஜயகாந்த் சாரை பார்க்க முடியவில்லை. அவரது மனைவி பிரேமலதாவிடம் தான் கொடுத்திருந்தேன். அவ்வளவு கஷ்டத்திலும் கூட பிரேமலதா என் மகள் கல்யாணத்திற்கு முந்தின நாள் வந்திருந்தார். அதை நான் எதிர்பார்க்கவே இல்லை.
நிச்சயம் அவருடைய ஆசீர்வாதத்தோடுதான் வந்திருப்பார். அவரை இந்த நிலையில் வந்து பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை. அவர் செய்த நல்ல விஷயங்கள் எப்போதும் நம்முடனேயே இருக்கும்” என்று கண்களில் தண்ணீர் ததும்ப பேசியுள்ளார்.
English Summary
actor radha tribute vijayakant memorable place