புதிய படத்தில் கமிட் ஆன நடிகை ரட்சிதா.! - Seithipunal
Seithipunal


’சரவணன் மீனாட்சி’, ‘பிரிவோம் சந்திப்போம்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்துப் புகழ் பெற்ற ரச்சிதா, பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராகக் கலந்து கொண்டார். இவருக்கும் தினேஷூக்கும் திருமணம் ஆன நிலையில், கடந்த சில வருடங்களாக இந்த ஜோடி பிரிந்து வாழ்ந்து வருகிறது. 

இதற்கிடையே தற்போதைய பிக் பாஸ் சீசனில் களமிறங்கிய தினேஷ் ரச்சிதாவின் ஆசையை நிறைவேற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வெல்ல வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால், ரச்சிதாவோ அமைதி, மகிழ்ச்சி என்று ஆன்மிக வழியில் பயணம் செய்வதாக அவ்வப்போது தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். 

இந்த நிலையில், ரச்சிதா புதிய படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளதாக போஸ்டரைப் பகிர்ந்திருக்கிறார். அதில், பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்ட பாலாஜி கதாநாயகனாக நடிக்க அவருடன் ரச்சிதா, சாந்தினி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். 

இந்தப் படத்திற்கு ‘ஃபயர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதிக ரிஸ்கான சண்டைக்காட்சி இவர்கள் மூவருக்குள்ளும் தற்போது படமாக்கப்பட்டுள்ளதையும் ரச்சிதா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor ratchitha new movie update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->