பிரபல நடிகர் ஆர்.கே வீட்டில் கொள்ளையடித்த 150 சவரன் தங்கநகை, பணம் மீட்பு.. 3 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


நடிகர் ஆர்.கே. வீட்டில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ரமேஷ் மற்றும் நேபாளத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் 'எல்லாம் அவன் செயல்' திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ராதாகிருஷ்ணன். இவர் சென்னை நந்தம்பாக்கம் அருகே டிபன்ஸ் காலனி பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த நவம்பர் 10ம் தேதி அவரது மனைவி வீட்டில் தனியாக இருந்தபோது பின்பக்க வழியாக வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளனர். 

மேலும், அவரை கட்டிப் போட்டுவிட்டு வீட்டிலிருந்த 200 சவரன் தங்க நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 அதில், அவரது வீட்டில் வேலை செய்து வந்த நேபாளத்தைச் சேர்ந்த காவலாளி தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளையர்களைப் பிடிக்க போலீஸார் 10 தனிப்படைகளை அமைத்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ரமேஷ் மற்றும் நேபாளத்தை சேர்ந்த 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து இதுவரை 150 சவரன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை மீட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், எஞ்சியுள்ள நகைகளையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor RK house theft case Gold jewellery and money recovered


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->