சந்தானத்தின் " இங்க நான்தான் கிங்கு " திரைப்படம் மே-10ம் தேதி வெளியாகிறது.!!
Actor Santhanam movie release date announced
மன்மதன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமானார் சந்தானம். அஜித், விஜய், கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி நடிகனாக பணியாற்றி தமிழ் சினிமாவில் பிரபலம் அடைந்தவர் சந்தானம்.
இனி நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அறிவித்த சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில், இந்தாண்டு ஆண்டு வெளியான டிடி ரிட்டன்ஸ் மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த் சந்தானத்தை கதாநாயகனாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் இங்க நான்தான் கிங்கு. இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மே 10 தேதி வெளியாகும் என்று பட குழு அறிவித்துள்ளது.
English Summary
Actor Santhanam movie release date announced