சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், அ.தி.மு.க., நிர்வாகி, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது..! - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க., நிர்வாகி மற்றும் போலீஸ் அதிகாரியை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர்.

சென்னை அண்ணாநகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் குற்றம் சுமத்தப்பட்ட சதீஷ் என்பவருக்கு ஆதரவாக செயல்பட்ட அ.தி.மு.க., 103-வது வட்டச் செயலாளர் சுதாகர் என்பவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.

மேலும், இந்த வழக்கை முறையாக விசாரணை செய்யாத மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜி என்பவரையும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK executive and female police inspector arrested in the case of sexual assault of a minor girl


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->