விஜய்யின் கோட் படத்தில் நடித்ததால் மன அழுத்தத்திற்கு ஆளானேன்; மீனாட்சி சௌத்ரி ஷாக்கின்..!
I was stressed after acting in Vijay goat; Meenakshi Choudhary is shocked
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடித்த படம் கோட். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். படத்தில் சினேகா, மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், லைலா, அஜ்மல், பிரபுதேவா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.
பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் படம் வெளியான கலவையான விமர்சனத்தால் படத்தில் வசூலில் கொஞ்சம் சொதப்பி இருந்தது.
இந்நிலையில், விஜய் கோட் படத்தில் நாயகியாக நடித்த மீனாட்சி சௌத்ரி ஒரு பேட்டியில், தான் செய்த மிகப்பெரிய தவறு என்று கேட்டால் கோட் படத்தில் நடித்தது தான் என்று கூறியுள்ளார். அத்துடன், இப்படத்தால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தெரிவித்துள்ளார்.
கோட் படத்தில் என்னுடைய காட்சிகள் மிகவும் குறைவு, ஒரு பாடலுக்கு மட்டுமே என்னை பயன்படுத்தினார்கள். படத்திற்கு எனது கதாபாத்திரம் தேவையே இல்லை என விமர்சனம் செய்து என்னை மையப்படுத்தி பல ட்ரோல் வெளியானது.
அதெல்லாம் பார்க்கும் போது மன அழுத்தத்திற்கு ஆளானதாக மீனாட்சி பேட்டி கொடுத்துள்ளமை விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
I was stressed after acting in Vijay goat; Meenakshi Choudhary is shocked