விபத்தில் சிக்கிய நடிகர் ஷாருக்கான்- அதிர்ச்சியில் ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


படப்பிடிப்பின்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் விபத்தில் சிக்கியதால், சிறிய அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் அவருக்கு மூக்கில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, நடிகர் நடிகர் ஷாருக்கான் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டாகவும் கூறப்படுகிறது.

பயப்படும்படி ஏதும் இல்லை என்றும், ரத்தப்போக்கை நிறுத்துவதற்காக மூக்கில் சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது அவர் அறுவை சிகிச்சை முடிந்து மும்பையில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து காயத்திலிருந்து மீண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் செப்டம்பரில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Shah Rukh Khan in an accident- fans in shock


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->