அடிதூள்! ரீ ரிலீஸ் ஆகும் பாகுபலி! ரசிகர்களின் கோரிக்கை!!!
Baahubali is being re released Fans demand
எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு பிரபாஸ்,அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன்,ராணா தகுபதி, நாசர், சத்யராஜ் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து பாகுபலி திரைப்படம் வெளியானது .
இப்படத்தின் இசையை எம்.எம் கீரவானி மேற்கொண்டார்.இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை மக்களிடையே பெற்றது.மேலும் இப்படம் இரு பாகங்களாக வெளியிடப்பட்டது. இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

சூப்பர்ஹிட்டான பாகுபலி திரைப்படம் உலகளவில் 1800 கோடிக்கும் மேல் வசூலித்து இந்திய சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது.இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 10 வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையில், படத்தை ரீரிலீஸ் செய்யுமாறு நெட்டிசன்கள் படக்குழுவிடம் இணையத்தில் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
நெட்டிசனின் கோரிக்கை ஒன்றுக்கு படக்குழு பதிலளித்துள்ளது. அதில் இந்த வருடம் பாகுபலி திரைப்படத்தை இந்தாண்டு ரீரிலீஸ் செய்யனுமா? என கேள்வி எழுப்பியுள்ளது.
இதனால் இந்தாண்டு ஜூன் மாதம் திரைப்படம் மீண்டும் ரிலீசாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியிலுள்ளனர்.
English Summary
Baahubali is being re released Fans demand