1200 ரூ திருடியதாக சந்தேகித்து சக ஊழியர் அடித்து கொலை..! - Seithipunal
Seithipunal


மஹாராஷ்டிராவில் ரூ.1,200-ஐ திருடியதாக சந்தேகப்பட்டு சக ஊழியரை அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த ராஜு என்கிற பைதுல்லா கான் (26) மற்றும் அஜய் (25) ஆகியோர் அப்பகுதியில் உள்ள கல்யாண மண்டப அலங்கார வேலை செய்துள்ளனர். அப்போது அவர்களிடம் இருந்த ரூ. 1200 பணம் காணாமல் போயுள்ளது. இதனால், அவர்களுடன் வேலை செய்த சக ஊழியரான அனில் பிரிஜ்லால் (36) என்பவரை சந்தேகித்துள்ளனர்.

அத்துடன் அவரிடம் பணத்தை கேட்டு இருவரும் சேர்ந்து இரும்பு கம்பிகள் மற்றும் மூங்கில்களால் அவரை சரமாரியாக அடித்துள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த அனில் பிரிஜ்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் குறித்த கொலை சம்பம் தொடர்பாக தகவலறிந்த போலீசார் ராஜு மற்றும் பைதுல்லா கான் இருவரையும் கைது செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A colleague was beaten to death on suspicion of stealing Rs 1200


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->