பிளாப் ஸ்டார் ஆக மாறுகிறாரா ஜிவி பிரகாஷ் குமார்?இசையில் ஹிட்: ஜிவி பிரகாஷின் கலவையான பயணம்! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தொடங்கிய ஜிவி பிரகாஷ் குமார், தற்போது நடிகராகவும் இடம்பிடித்துள்ளார். ஆனால், அவர் நடித்த பெரும்பாலான படங்கள் வசூலில் சரிவைக் கண்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் 25 படங்களில் நடித்துள்ள ஜிவியின் வெற்றிப்படங்கள் மிகவும் குறைவாக உள்ளன.

இசையமைப்பாளர் அவதாரம்:

வசந்த பாலன் இயக்கிய வெயில் (2006) படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி, கிரீடம், ஆயிரத்தில் ஒருவன், தலைவா போன்ற படங்களின் இசையால் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார்.

நடிகராக தோல்விப் பாதை?

2015ல் வெளியான டார்லிங் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர், அதன் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார். ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் நடித்த 10 படங்களில் பேச்சிலர் தவிர மற்ற 9 படங்களும் பிளாப் ஆகிவிட்டன.

 பிளாப் படங்கள்:

  • வணக்கம் டா மாப்ள
  • ஜெயில்
  • செல்பி
  • ஐங்கரன்
  • அடியே
  • ரிபெல்
  • கள்வன்
  • டியர்
  • கிங்ஸ்டன்

இதைத் தொடர்ந்து, அவர் தயாரித்த கிங்ஸ்டன் படம் கூட பெரிய அளவில் தோல்வி அடைந்தது.

இசையில் வெற்றிப்படங்கள்!

நடிப்பில் சறுக்கினாலும், இசையில் தொடர்ந்து கலக்கி வரும் ஜிவி, கடந்த ஆண்டு வெளியான அமரன், லக்கி பாஸ்கர் போன்ற படங்களுக்காக இசையமைத்தார். இவை இரண்டும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்ததோடு, அமரன் மட்டும் ரூ. 350 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றியை கண்டது.

அடுத்தடுத்த பெரிய படங்கள்:

  • வீர தீர சூரன்
  • அஜித்தின் குட் பேட் அக்லி
  • தனுஷின் இட்லி கடை

 இசையில் கவனம் செலுத்தினால் அனிருத்துக்கு நேரடி போட்டியாக மாறக்கூடும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is GV Prakash Kumar becoming a blockbuster star Hits in music GV Prakash mixed journey


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->