23 ஆண்டுகள் கழித்து அதே நாளில் த்ரிஷா.! - Seithipunal
Seithipunal


கல்கி எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் திரைக்கதையை மணிரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ள, இப்படம் இன்று உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியானது. படத்தில் உள்ள அனைத்து விமர்சனங்களும் நேர்மறையாக இருப்பதால் மிகப்பெரிய வணிக வெற்றியை இப்படம் அடையும் என்று விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இப்படத்தில் குந்தவையாக நடித்த நடிகை த்ரிஷாவுக்கும் நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. அதிலும் குறிப்பாக, ’ராட்சஸ மாமனே’ பாடலில் ரவிவர்மன் ஒளிப்பதிவில் வசீகரமான த்ரிஷா ரசிகர்களை ’விசில்’ அடிக்க வைக்கிறார். 

த்ரிஷாவின் சினிமா வாழ்வில் இது முக்கியமான திரைப்படமாக உள்ளது. அதேசமயம், பொன்னியின் செல்வன் வெளியான இதே நாளில் இன்னொரு மகிழ்ச்சியான நிகழ்வும் த்ரிஷாவின் வாழ்வில் நடந்துள்ளது.

கடந்த 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி தன் 16-வது வயதில் த்ரிஷா சென்னை அழகிப்பட்டத்தைப் பெற்றுள்ளார். அப்போது, கல்லூரி மாணவியான அவர் சரியாக 23 ஆண்டுகள் கழித்தும் அதே பொலிவுடன்  இருப்பது அவரின் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor trisha act in ponniyin selvam movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->