மீண்டும் பிரபாஸுடன் நடிக்கும் திரிஷா..! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் சுமார் 21 ஆண்டுகளாக தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டவர் நடிகை திரிஷா. பல்வேறு நடிகர்களுடன் நடித்த இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

தற்போது இவர் அஜித்துடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி மற்றும் கமலின் தக் லைப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் 'விஸ்வம்பரா' படத்திலும், மலையாளத்தில் இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். 

இப்படி அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் நடிகை திரிஷா அடுத்ததாக பிரபாஸுடன் இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்தை சந்தீப் ரெட்டி இயக்க உள்ளார். திரிஷா ஏற்கனவே, பிரபாஸுடன் இணைந்து பவுர்ணமி, புஜ்ஜி காடு போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor trisha joined work with actor praboss


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->