அப்டேட்டுக்கு தயாராக இருங்க நண்பா நண்பீஸ்...!!! விஜயின் 'ஜனநாயகம்'- 6 மணிக்கு வெளியாகும்...!
actor Vijay Janayagam movie releasing update at 6 pm
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான தளபதி விஜய்யின் 69-வது படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'ஜன நாயகன்' என்று தலைப்பு வைத்துள்ளது படக்குழு .

இப்படத்தில் மமிதா பைஜு,பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன்,நரேன் ஆகியோர் நடிக்கின்றனர்.மேலும் கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இது குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகின.இந்நிலையில், இன்று இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.இதற்கு முன்பே இந்த படமானது வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டநிலையில் தற்போது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் 'ஜன நாயகன்' படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.இதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.
English Summary
actor Vijay Janayagam movie releasing update at 6 pm