மதுரை மத்திய சிறை கைதிகளுக்கு விஜய் சேதுபதி செய்த செயல்.. குவியும் பாராட்டுக்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக அறிமுகமாகி அதன்பிறகு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூது கவ்வும் ஆகிய திரைப்படங்களில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து, தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். இந்நிலையில், தற்போது நடிகர் விஜய் சேதுபதி இந்தி ரீமேக் என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்துள்ள விடுதலை திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு 1000 புத்தகங்களை வழங்கி உள்ளார். அதனை மதுரை மத்திய சிறைத்துறை துணைத் தலைவர் பழனி சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் வசந்த் கண்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நடிகை விஜய் சேதுபதியின் இந்த செயலுக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vijay sethupathi donate 1000 books madurai Central Jail library


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->