திருநெல்வேலி அலங்கார் தியேட்டர் மீது குண்டு வீசிய முக்கிய குற்றவாளி இம்தியாஸ் கைது..!
The main accused in the Tirunelveli Alankar Theater bombing Imtiaz has been arrested
திருநெல்வேலி மேலப்பாளையம் அலங்கார் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி இம்தியாஸ் கைது செய்யப்பட்டார். அமரன் படம் திரையிடப்பட்டிருந்த போது நவம்பர் 16 அதிகாலையில் மர்ம நபர்கள் பெட்ரோல் அலங்கார் தியேட்டர் மீது குண்டுகளை வீசியிருந்தனர்.
இதில் பெரிய சம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை. இப்பினும், இந்த சம்பவத்தில் முதலில் உள்ளூர் போலீசார் துணை கமிஷனர் விஜயகுமார் தலைமையில் விசாரித்து இருவரை கைது செய்தனர்.
பின்னர் குறித்த வழக்கு தமிழக போலீஸ் தீவிரவாத தடுப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டது. தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி.ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் குழுவினர் மேலப்பாளையத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தினர்.
அமரன் படத்திற்கு எதிராக சித்தாந்த அடிப்படையில் தீவிரவாத நோக்கத்துடன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
இதன் பின்னணியில் முக்கிய நபராக செயல்பட்ட மேலப்பாளையம் அல்அமீன் நகரை சேர்ந்த இம்தியாஸ் 42, தலைமறைவாக இருந்தார். தீவிரவாத அமைப்பை சேர்ந்த அவர் மீது வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. குறித்த நபர் போலீசார் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கைது செய்துள்ளனர்.
குறித்த குண்டுவீச்சு சம்பவத்தில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த செய்யது முகமது புகாரி, முகம்மது யூசுப் ரஷீன், கோலா பாதுஷா, சிராஜுதீன், நிசார் ஆகிய ஐந்து பேரை ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். மேலும் தொடர்புடைய நபர்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
The main accused in the Tirunelveli Alankar Theater bombing Imtiaz has been arrested