அடுத்து சூப்பர் ஸ்டாருக்கு வில்லனா... அடித்து ஆடும் விஜய் சேதுபதி! - Seithipunal
Seithipunal


தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட திரைப்படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் ஹிந்தியில் மும்பைகார், மேரி கிறிஸ்மஸ், ஜவான் ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.

நடிகர் சாருக் கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படத்தில், விஜய் சேதுபதி முக்கிய வில்லனாக நடித்துள்ளார். 

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் 'பார்சி' என்ற வெப் தொடரிலும் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதுவும் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

இந்த நிலையில், நடிகர் சல்மான்கானுக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சல்மான்கான் நடிக்க உள்ள புதிய திரைப்படத்தில், வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க வேண்டும் என்று, இந்த படத்தை தயாரிக்கும் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக சினிமா வட்டாரத்தில் தகவல் கசிந்து உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vijay Sethupathy may be act in salman khan movie


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->