சேலம், நாமக்கல்லில் டிரோன்கள் பறக்கத் தடை - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்தில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கவும் உள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் மாவட்டத்தில் உள்ள காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னைக்கு திரும்ப உள்ளார். 

முதல்வரின் வருகையை முன்னிட்டு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ban of drone fly in salem namakkal districts


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->