32 இயர்ஸ் ஆப் விக்ரம் - ட்விட்டரில் வலம் வரும் நடிகர் விகாரம்..!
actor vikram 32 years in cini field
நடிகர் விக்ரம் திரையுலகில் தடம் பதித்து இதுவரை 32 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவுடன் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விக்ரம் 1990-ம் ஆண்டு வெளியான 'என் காதல் கண்மணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். அதற்கு பிறகு அவர் பல படங்களில் நடித்து இருந்தாலும், அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது 'சேது' படம்தான்.
இப்படத்தில் அவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து, தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். இதையடுத்து, தமிழ் தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் 'பொன்னியின் செல்வன்' படம் விக்ரமுக்கு பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளது. சினிமாவில் நுழைந்து இதுவரை 32 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், நடிகர் விக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
''இத்தனை வருடங்கள். அத்தனை கனவுகள். முயற்சி திருவினை ஆக்கும் என்பார்கள். நீங்கள் இல்லையெனில் அது வெரும் முயற்சி மட்டுமே. இந்த 32 வருடங்களுக்கு நன்றி'' என்று தெரிவித்து வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் டுவிட்டரில் 32 இயர்ஸ் ஆப் விக்ரம் என்ற ஹேஷ்டேக்குடன் கொண்டாடி வருகின்றனர்.
English Summary
actor vikram 32 years in cini field