சிறுத்தை நடமாட்டம் - திருமலை செல்லும் பக்தர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


திருமலை சேஷாசலம் வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும்  திருமலைக்கு வரும் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அலிபிரி நடைபாதையில் எந்த ஒரு பக்தரும் தனியாகச் செல்ல வேண்டாம், கும்பலாகச் செல்ல வேண்டும், என எச்சரிக்கை விடுத்தனர்.

திருமலை அருகே சிலோத்தோரணம் என்ற மலைப் பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில்  பாறைகள் 'தோரண வாயில்' போன்ற வடிவில் இயற்கையாகவே உள்ளன.இதனை காண  அங்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று சிலோத்தோரணம் மலைப்பாறையைப் பார்ப்பார்கள். அவ்வாறு நேற்று முன்தினம் மதியம் பக்தர்கள் சிலோத்தோரணம் மலையைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, இரு பாறை இடுக்குகளில் ஒரு சிறுத்தை வந்து படுக்கும் காட்சியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

உடனே பக்தர்கள், திருமலை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுத்தையை விரட்டியடிக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.

இதையடுத்து அப்போது வனத்துறை அதிகாரிகள் கூறும் போது , திருமலை சேஷாசலம் வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளன யென்றும் . இருப்பினும், கடந்த காலங்களில் சிலாத்தோரணம் மலைப்பகுதிக்கு சிறுத்தைகள் வந்துள்ளன என்றும் தற்போது மீண்டும் சிறுத்தை வந்துள்ளது என கூறினார் . எனவே திருமலைக்கு வரும் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்என்றும்  அலிபிரி நடைபாதையில் எந்த ஒரு பக்தரும் தனியாகச் செல்ல வேண்டாம், கும்பலாகச் செல்ல வேண்டும், என  அதிகாரிகள்எச்சரிக்கை விடுத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Forest dept warns devotees of leopard movement in Tirumala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->